# ஆஞ்சனேய ஆசனம்

**Asana:** Anjaneya Asana (ஆஞ்சனேய ஆசனம்)
**Category:** Seated & Meditation
**Date:** 19 Mar 2022
**Duration:** 6m 17s
**Video:** https://www.youtube.com/watch?v=Wmgnk2fYa40
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/anjaneya-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/183.json

## Summary

The video begins with a discussion on meditation, especially Saguna Dhyana (meditating on tangible objects), its roots in ancient texts, and its importance for positive thinking and preparation for higher states of meditation. The second half demonstrates Anjaneya Asana (Low Lunge), explaining step-by-step how to perform it, its effects on the lower body, and its benefits for stretching and strengthening the thighs and lower back.

**Tags:** meditation preparation, positive thinking, Saguna Dhyana, Upanishadic tradition, Anjaneya Asana, low lunge, thigh stretch, lower back stretch, leg strengthening

## Chapters

- `0:00` Topic: Saguna Dhyana and meditation preparation
- `5:45` Asana: Anjaneya Asana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` To Podhigai friends  
  _பொதுகி நண்பர்களுக்கு_
- `0:05` Greetings.  
  _வணக்கம்._
- `0:06` Friends, these meditation methods or meditation-related topics have been discussed in various ways since the time of the Upanishads.  
  _நண்பர்களே இந்த தியான முறை அல்லது தியானித்தல் சார்ந்த விஷயங்களை உபநிஷத் காலத்திலிருந்து பல்வேறு விதமாக_
- `0:10` They have been continuously discussed.  
  _பேசப்பட்டுக் கொண்டே வருகிறது._
- `5:45` Our tradition has spoken in detail about what all can be meditated upon, what tools or concepts are needed for meditation. Meditating on direct, tangible things is very important. Today, modern psychology and science keep repeating 'positive thinking.' If you look at where positive thinking originated, it has been discussed in depth since ancient times and the Upanishad era, especially about meditating on direct, tangible things. One method is called 'Saguna Dhyana,' which means meditating on concrete, quality-filled objects. Saguna Dhyana is a grand cosmic movement, very positive and balanced. The Bihar School of Yoga and the Satyānanda Yoga System have explained and practiced this deeply and scientifically. For example, the Yoga Darshanam text discusses Saguna Dhyana and earlier meditation methods, giving clear explanations relevant to today. To meditate on a supreme object, you must first prepare yourself and qualify for meditation. There are foundational practices for this, and through them, you can reach higher states of meditation. Why reach higher states? We've already discussed dharma, our existence, our purpose in this world, and the basic things to do to achieve it. Saguna Dhyana is a lofty state, and to reach it, you need qualifications like asana, pranayama, and pratyahara—practices that turn inward. Today, the asana we are going to see is called Anjaneya Asana. First, place your feet together, transfer your body weight properly onto your feet. That's the first stage. Then, move either your right or left leg forward fully, with the big toes aligned in a straight line. If you measure, both should be equally spaced. In this position, your body weight should be evenly distributed between both legs. After this, slowly raise your hands while inhaling. As you exhale, push your right hip forward, and at the same time, lift your left heel upward. In the final position, you are slightly bent backward. In this bent position, inhale and exhale three times. After breathing, return to normal, lower your hands, bring your feet together, close your eyes. Since the right leg was forward, blood flow and relaxation happen on the right side. If you observe, the right side feels relaxed. To balance, repeat with the left side. Again, move your leg forward as much as possible, raise your hands while inhaling, bend forward as much as you can, and in the final position, lift your right heel well. You are standing on your right toes, and your left foot is flat on the ground. In this final position, inhale and exhale three times. Do three times on each side. What happens? The whole body gets a good stretch. Usually, areas where tension accumulates are the lower back, thighs, and neck. Many people have weakness in the thigh area, can't sit or stand for long, keep moving their legs, feeling stiff. This weakness is the cause. The stretch in this practice helps to properly extend and contract, or lengthen and fold, removing stiffness in the legs and thighs, making them healthy and strong. We'll meet again with another practice tomorrow morning. Thank you, greetings.  
  _எதை எல்லாம் தியானித்தல் இந்த தியானிப்பதற்கான கருவிகள் அல்லது கருத்துகோழ்கள் எவை எல்லாம் இருக்க வேண்டும் என்பதை பற்றி நம்மது மரபு மிக விரிவாக இதைப் பற்றி பேசிருக்கிறது. எதை தியானித்தல் என்று வரும் பொழுது நேர்மரையான விஷயங்களை தியானித்தல் என்பது மிக முக்கியமான விஷயம். இன்னைக்கி, மாடன் சைக்காலஜியா இருக்கட்டும், மாடன் சைன்ஸ்ல திரும்ப திரும்ப சொல்றாங்க இல்லையா? Positive thinking, Positive thinking என்று சொல்லிக்கொட்டே இருக்கும்ல, இந்த Positive thinking அப்படியெங்கிற விஷயம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று பாத்தீங்கன்னா நம்ம ஏதுகாலத்திலிருந்து, அல்லது உபனிஷத் காலத்திலிருந்து இந்த நேரடி, அல்லது நேர்மரையான விஷயங்களை தியானித்தல் என்பது பற்றி மிக விரிவாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதுல ஒன்னு சகுண தியானம் என்று சொல்லுவாங்க, சகுணம் அப்படின்னா நேர்மரை, கல்லான குணம் அப்படின்னு கூட சொல்லலாம். நேர்மரையான விஷயங்களை, கல்லான குணம் இருக்க கூடிய விஷயங்களை தியானித்தல் என்பது ஒரு முறைமை. இந்த சகுண தியானம் என்பது ஒரு பிரமாண்டமான பிரவஞ்சி இயக்கம் நடைந்து கொண்டிருக்கிறது. அது ரொம்ப positive ஆன, ரொம்ப சமநிலையான ஒரு பிரவஞ்சி இயக்கம் நடக்கது. அந்த பிரமாண்டமான, அல்லது அந்த பிரவஞ்சி இயக்கத்தை தியானிக்க கூடிய ஒரு முறைமைக்கு பெயர் சகுண தியானம் என்று பெயர். பிஹார் School of Yoga, அல்லது சத்தியானந்த யோகா சிஸ்டம் இருக்கு இல்லையா? அவங்க இதுபற்றி மிக விரிவாக, ரொம்ப கிட்டத்தட்ட ஒரு ஆழ்ந்து, அனுபவபூருமாகவும், அறிவியல் பூருமாகவும் சில பயிற்சி, அதற்கான விளக்கம், ரெண்டையுமே முன்னோக்கிறாங்க. உதாரணமா, யோக தர்ஷணம் என்று சொல்லக்கூடிய ஒரு முக்கியமான யோக நூல். இன்னூலில் இந்த சகுண தியானம் பற்றியும், இதற்கு முன்னால் நாம் பார்த்த தியான முறைமைகள் பற்றியும், உபனிஷத் காலத்தில் என்ன இருந்ததோ, அதற்கான இன்றைய விளக்கம், இந்த காலக்கட்டத்துக்கு அது எப்படி பொருந்தி வரும் என்பது போன்ற விளக்கத்தையும், மிகத் தெளிவாக அன்னூல் பேசுகிறது. அதில தான் நான் சொன்ன மாதிரி இப்ப ஒரு பரமார்த்தமா அப்படின்னு சொல்லக்கூடிய, அல்லது பரம் பொருள் என்று சொல்லக்கூடிய, ஒரு விஷயத்தை நீங்கள் தியானிக்க வேண்டும் என்றால், முதல்ல அந்த தியானத்தை நிகழ்த்துவதற்கு உங்களை நீங்கள் தகுதி படித்துக்கொள்ள வேண்டும், தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி தயார்படுத்திக்கொள்ளுவதற்காக சில அடிப்படைகள் இருக்கிறது. அந்த அடிப்படைகளை செய்வதன் மூலமாக, நீங்கள் உயர்வான தியான நிலைகளையும் அடைந்து விட முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உயர்வான தியான நிலையை நான் ஏன் அடையனும், அப்படின்னா நாம ஏற்கனவே நிறைய பாத்துட்டோம், சொதர்மம் பத்தி பேசிருக்கோம், நம்முடைய இருப்பு, இந்த உலகில் நாம் வந்த நோக்கம், அதை அடைவதற்கான அடிப்படையான விஷயங்கள் என்னலாம் செய்யனும், அதெல்லா பட்டனியும் பார்த்திருக்கோம். அப்படித்தான் இந்த சகுன தியானம் என்பது உன்னதமான ஒரு தியான நிலை, அந்த தியான நிலையை அடைவதற்கு அடிப்படையான சில தகுதிகள் தேவை, அந்த தகுதிகள் ஆசனம், பிராணயாம், ப்ரத்தியாஹாரம் என்று சொல்லக்கூடிய புதங்களை உள்ளோக்கி திருப்பும் பயிற்சிகள், இந்த மூன்றின் மூலமாக கட்டமைத்து கொள்ளலாம். இன்று நாம் பாகப் போகும் ஆசனத்திற்கு பெயர் ஆஞ்சனைய ஆசனம் என்று பெயர். இந்தப் பயிற்சி முதல்ல என்னனா, இங்க உங்களோடிய கால்கள் இரண்டு மொன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் வைத்த உடலின் எடையை மிகச் சரியாக உங்கள் பாதங்களுக்கு செலுத்தி விடவேண்டும். இது முதல் நிலை. அச்சா, இப்ப உங்களோடிய எதையும் ஒரு கால், வலது கால், இடது காலை முழுவதுமாக முன்புரமாக கொண்டு சென்று, வலது காலின் பெருவிரலும், இடது காலின் நேராக இருக்க வேண்டும், நல்ல நேரா உங்களோடிய இடது காலின் பெருவிரலும், ஒரே நேர்கோட்டில் கிடைக்கட்டே ஒரு நூல் பிடிச்சா, இந்த ரெண்டுக்கும் எடையில் ஒரே சரி சமமான நீளம் இருக்க வேண்டும், அந்த கோடு இருக்க வேண்டும். இதுதான் முதல் நிலை. இந்த நிலையில் உங்களோடிய உடலின் எடை மிகச்சரியாக வலது மற்றும் இடது காலுக்கு போய்யணும். இது முடிந்த உடன் மெதுவாக கைய மேல இந்ஹேல் பண்ணிட்டை மேல தூக்கினோமு. எக்சேல் பண்ணும்போது மூச்சு வெளியே போகும்பொழுது, வலது மூட்டு பகுதியை முழுவதுமாக முன்புரம் தள்ளி, அதே நேரத்தில் உங்களோடிய இடது கால், குதிகால் பகுதி மேல் புரமாக தூக்கிய நிலையில் இருக்க வேண்டும். இந்த இருதி நிலையில் லேசா நீங்கள் பின் பக்கம் வளைந்திருக்கிறீங்க. அந்த வளைந்த நிலையில் மூன்று முறை இந்ஹேல் எக்சேல். மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின், மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி, கைகளை கீழே போட்டு விட்டு இரண்டு கால்களையும் அருகில் வைத்து கண்களை மூடி, இப்ப வலது கால் முன்புரம் வந்ததுனால இந்த ரத்த ஓட்டமார்க்கட்டும், நல்ல ஒரு விரிவடைந்து தளர்ந்த தன்மையார்க்கட்டும், இது எல்லாமே வலது பக்கம்தான் நடந்துருக்கும். அதனால் வலது பக்க உடல் முழுவதையும் கவனிச்சு பார்த்தா தெரியும், வலது பக்கம் ஒரு வேளை உங்களுக்கு இருக்கம் இருந்திருந்தால் இந்த பயிற்சியின் முடிவில் வலது பக்கம் இலகுவாகவும் ரொம்ப அப்படியே ரிலாக்ஸ்டாவும் மாறிருக்கும். அதற்கு இன்னையாகவே நீங்கள் இடது பக்க உடலையும் சம நிலையோட கொண்டு வரணும். அதனால் மறுபடியும் கால்கள் இரண்டையும் நல்லா ஒரு கால எடுத்துத் எவ்வளவுதுற முனாடி வைக்க முடிமோ வைச்சு மெதுவா கைகளை மேல் நோக்கி உயர்த்தி மேல் கைகள் உயர்த்தும்போது நீங்கள் மூச்சு உள்ளிழுத்திருக்கீங்க. மூச்சு வெளியில விழும்போது முன்புரமாகக் குனிந்து, உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குனிந்த பின் இருதி நிலையில் உங்களுடைய வலது காலின் குதிகால் பகுதி இருக்கிறாயா? அந்த குதிகால் பகுதியை நல்லா தூக்கணும். அப்போ உங்களுடைய வலது கால் விரலில்தான் நீங்கள் நிற்கிறீர்கள். அதே நேரத்தில் இடது காலின் பாதம் முழுவதும் தரையில் பதிந்த நிலையில் இருக்கிறது. அப்போ அந்த இருதி நிலையில் நீங்கள் என்ன பண்லாம் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம். மூன்று முறை வலது பக்கம் மூன்று முறை இடது பக்கம் செய்து முடித்த உடன் முதல்ல நடக்கக்கூடியது என்ன? அந்த உடல் முழுவதும் நல்ல ஸ்ட்ரெச்சு கிடைச்சிருக்கும். பொதுவா நம்முடைய இருக்கங்கள் தேக்கி வைக்கக்கூடிய பகுதி அப்படியென்று நாம அடிக்கடி சொல்லக்கூடியது லோவர் பைக் என்று சொல்லக்கூடிய அடி முதுகு பகுதி, தொடை பகுதி, கழுத்து பகுதி. பெரும்பாலும் நாம எல்லோருமே, சிலருக்கலாம் பாத்தீங்கனா தொடை பகுதியில் இருக்கக்கூடிய பலவீனம் ரொம்ப நேரம் உக்காந்திருக்க முடியாது, ரொம்ப நேரம் நின்றுகிட்டே ஒரு வேலை செய்ய முடியாது, கால் அசச்சு கிட்டே இருப்பாங்க. என்னனா ஒரு மரத்து போன தன்மை உண்டாயிரும். இது எல்லாவற்றுக்கும் அந்த இடத்திலிருக்க கூடிய பலவீனம்தான் காரணம். இந்த பயிற்சில கிடைக்க கூடிய ஸ்ட்ரெச்சு சரியாக விரித்து சுருக்கும் தன்மை அல்லது நீட்டி மடக்கும் தன்மை உங்களுடைய கால், தொடை பகுதியில் இருக்கக்கூடிய இருக்கத்தை நீக்கி மிகச் சரியான ஒரு ஆரோக்கியமான அல்லது ஒரு திடகாத்திரமான தொடை பகுதிகளாக மாற்றிவிடும். மீண்டும் ஒரு பயிற்சியுடன் நாளை காலை சந்திப்போம். நன்றி, வணக்கம்._
