# பூர்வ ஹாலாசனம் ( நிலை -2 )

**Asana:** Poorva Halasana (பூர்வ ஹாலாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 17 Jun 2022
**Duration:** 8m 0s
**Video:** https://www.youtube.com/watch?v=k5QQAt_Dv7U
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/poorva-halasana-271
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/271.json

## Summary

The video discusses the Ayurvedic classification of body types (lean, stout, and balanced) and how yoga practices should be tailored accordingly. It then introduces and demonstrates Poorva Halasana, a preparatory variation of Halasana, explaining its steps, alignment, and contraindications. The demonstration emphasizes keeping the knees straight and avoiding movement above the hips for safety and effectiveness.

**Tags:** body constitution, Ayurvedic types, personalized yoga practice, diet and lifestyle, Poorva Halasana, hamstrings stretch, core activation, spinal alignment

## Chapters

- `0:00` Topic: Yoga for Different Body Types and Constitutions
- `5:31` Asana: Poorva Halasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _Подுகை நண்பர்களுக்கு வணக்கம்_
- `0:06` Friends, in Ayurveda, what is called 'dehabalam' (bodily strength)  
  _நண்பர்களே, ஆயுர்வேதத்தில் தேஹபலம் என்று சொல்லக்கூடிய_
- `0:10` A person with great bodily strength  
  _உடல் வளம் மிக்க ஒருவரை_
- `0:13` Or the concept called bodily strength  
  _அல்லது உடல் வளம் என்று சொல்லக்கூடிய கருத்தை_
- `0:16` Is classified into three types  
  _மூன்று வகையாக_
- `0:18` They categorize it  
  _வகைமைப்படுத்துகிறார்கள்_
- `0:19` First  
  _முதலில்_
- `0:20` The 'Krisha' type, meaning lean  
  _கிரீஷ என்று சொல்லக்கூடிய ஒல்லியான_
- `0:23` For those with a lean body type  
  _உருவம் இருக்கக்கூடியவர்களுக்கான_
- `0:27` What is health for them  
  _உடல் ஆரோக்கியம் என்ன_
- `0:28` When classifying, since they have more vata (air element), they are lean—this is the first type  
  _என்பதை வகைமைசெய்யும்போது அவருடைய உடம்பில் வாதத்தன்மை அதிகமாக இருப்பதால் அவர் ஒல்லியாக இருக்கிறார் இது முதல் நிலை_
- `0:37` Those with this vata nature  
  _இந்த வாதத்தன்மை இருக்கவவர்கள்_
- `0:39` Always  
  _எப்போதும்_
- `0:41` Will be active and moving; to make that movement  
  _சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பார்கள் அந்த இயக்கத்தை மிகச்_
- `0:42` Proper, healthy movement, they need  
  _சரியான இயக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் ஆரோக்கியமான_
- `0:45` Through food  
  _உணவின்_
- `0:46` Only by means of  
  _மூலமாகத்தான்_
- `0:47` These vata issues can be managed.  
  _இந்த வாதப்பிரச்சினைகளை சதி செய்ய முடியும்._
- `0:49` Therefore  
  _ஆகவே_
- `0:50` A lean person, as called 'Krisha', with a thin body  
  _கிரிஷ என்று சொல்லக்கூடிய ஒல்லியான ஒருவர் மெலிந்த தேகமுருக்கக் கூடிய_
- `0:53` Such a person  
  _ஒருவர்_
- `0:55` To be active and healthy  
  _சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும்_
- `0:56` If they want to be healthy  
  _இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான_
- `0:58` They must eat healthy food  
  _உணவை உட்கொள்ள வேண்டும்_
- `0:59` That is very important.  
  _என்பது மிக முக்கியமான ஒன்று._
- `1:02` Next  
  _அதற்கு அடுத்ததாக_
- `1:03` Those with a stout body.  
  _ஸ்தூல சரீரம் கொண்டவர்._
- `1:04` Stout body means  
  _ஸ்தூல சரீரம் என்பது_
- `1:06` A body dominated by kapha (water element). Kapha  
  _கபம் மிதுந்த உடல் என்று சொல்லப்படுகிறது. கபம்_
- `1:08` Means water element dominant  
  _என்றால் நீர்தன்மை மிதுந்த_
- `1:09` Body.  
  _உடல்._
- `1:10` So, they will be somewhat overweight.  
  _ஆகவே அவர் சற்று பருமணாக இருப்பார்._
- `1:13` They  
  _அவர்_
- `1:14` If they want to be healthy  
  _மிகச் சரியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால்_
- `1:17` In their diet  
  _அவர் உணவில்_
- `1:19` They must have control. The first type  
  _கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும். முதலில் இருப்பவர்_
- `1:20` Should eat more. The second, the stout-bodied  
  _அதிகமாக உணவு உட்கொள்ள வேண்டும். இரண்டாமாகையான இந்த ஸ்தூல சரீரத்தை சேர்ந்தவர்_
- `1:25` Should have dietary control.  
  _உணவில் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும்._
- `1:27` Eat only the right amount,  
  _மிகச் சரியான அளவு மட்டுமே உணவை உட்கொள்ளுதல்,_
- `1:30` And that food  
  _அந்த உணவும்_
- `1:31` Should also be healthy food only.  
  _ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஒரு உணவாக மட்டுமே உட்கொள்ளுதல்._
- `1:35` This is the second, for the stout body type.  
  _இது இரண்டாவது ஸ்தூல சரீரத்திற்கான நிலை._
- `1:39` The third body type is 'Madhyama'  
  _மூன்றாவது சரீரம் மத்தியம்_
- `1:40` As it is called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:42` Vata  
  _வாதமும்_
- `1:43` And pitta.  
  _பித்தமும்._
- `1:43` That is, in the body  
  _அதாவது உடலில்_
- `1:45` The air element and what is called pitta  
  _வாயுத்தன்மையும் பித்தம் என்று_
- `1:46` As called  
  _சொல்லக்கூடிய_
- `1:47` The heat element combined  
  _உஷ்ணத்தின் தன்மையும் இணைந்து உருவாக்கக்கூடிய_
- `1:49` A  
  _ஒரு_
- `1:51` Body structure  
  _உடல் கட்டமைப்புதான்_
- `1:52` Is the proper 'madhyama' (balanced) body.  
  _மிகச் சரியான மத்திம உடல் என்று சொல்லக்கூடிய._
- `1:54` According to the BMI chart  
  _BMI chartப்படி_
- `1:56` I am in the correct range,  
  _சரியான ரேட்டில இருக்கேன்,_
- `1:57` They say they are at the right scale,  
  _சரியான ஸ்கேல்ல இருக்கேன் என்று சொல்றாங்களே,_
- `1:59` That BMI chart  
  _அந்த BMI chart என்பது_
- `2:00` Refers to this balanced body. Madhyama body  
  _இந்த மத்திம உடலைத்தான் சொல்கிறது. மத்திம தேகம்_
- `2:03` As it is called. So, that bodily strength  
  _என்று சொல்லக்கூடிய. அப்படி அந்த தேகபலம்_
- `2:04` Is  
  _என்பது_
- `2:06` Present in three different states.  
  _மூன்று விவேற நிலைகளில் இருக்கிறது._
- `2:08` Therefore  
  _ஆகவே_
- `2:08` Food and habits must also be different,  
  _உணவு, பழக்க வழக்கமும் விவேறாக இருந்தாக வேண்டும்,_
- `2:12` Exercise too must be different  
  _உடற்பயிற்சியும் விவேறாக_
- `2:13` Must be different,  
  _இருந்தாக வேண்டும்,_
- `2:15` Lifestyle must also be different.  
  _வாழ்க்கை முரையும் விவேறாக இருந்தாக வேண்டும்._
- `2:18` How is this seen in yoga?  
  _இதை யோகமனபில் எப்படி பார்க்கிறார்கள் என்றால்,_
- `2:22` For a lean person  
  _மெலிந்த தேகம் இருக்கக்கூடிய ஒருவருக்கு_
- `2:24` The practices are different.  
  _செய்யக்கூடிய பயிற்சிகள் வேறுவிதமாக இருக்கிறது._
- `2:27` For very overweight  
  _மிகப் பருமணான_
- `2:28` People, the yoga practices are different. Similarly  
  _உடல் இருக்கக்கூடிய ஒருவருக்கு செய்யக்கூடிய யோகப்பயிற்சிகள் வேறுவகையானவாக இருக்கிறது. அதேப் போல_
- `2:32` Those with a balanced body structure,  
  _மிகச் சரியான உடல் அமைப்பு இருக்கக்கூடியவர்,_
- `2:36` To maintain that, they must choose suitable practices.  
  _அந்த உடல் அமைப்பை நிர்வாகம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தகுந்த பயிற்சிகளை அவர் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது._
- `5:31` The same applies to body strength. If someone is lean, most asanas and pranayamas should be done seated. If someone is heavy, that is, with a stout body, the practices should mostly be dynamic, standing movements. For those with a balanced body, if they maintain the same weight for 20 or 30 years, it means they are very healthy. They have a balanced body. They must choose practices suitable for them. Of these, 15 minutes should be standing practices, 15 minutes seated. Only then can a healthy weight be maintained for 40 or 50 years. Whether you choose dietary control, exercise, or yoga, you must know your type and choose accordingly. Today we are going to see a new practice. This is a traditional variation of Halasana. Because doing full Halasana has many side effects and benefits, instead of doing it directly, today we try a traditional practice suitable for a beginner's body. This is also Halasana, called Poorva Halasana. To do this, lie in Savasana, keep your body straight, hands close to the body with palms down. We have already seen Pada Uttanasana, which is just lifting the legs up. This is almost similar. As you inhale, lift both legs up together. In the final position, your toes should be directly above your forehead. If you open your eyes, your toes should be in line with your eyes. In the final position, after one breath in and out, slowly bring your legs down to the floor. There should be no movement above your hip. Usually, in most asanas,  
  _உடல் பலத்திலும் இதேதான் முரமை. ஒருவர் ஒல்லியாக இருந்தால், அவர் பெரும்பாலான ஆசனங்களும் பிராணாயாமங்களும் அமர்ந்த நிலையில் செய்யக்கூடிய ஆசன, பிராணாயாம முறையுமையாக இருக்க வேண்டும். ஒருவர் வலம், அதாவது தேக வலம் வந்து அவருடையது ஸ்தூல சரீரமாக இருக்கிறது, குண்டான பருமணான உடல் எடை கொண்டவராக இருந்தால், அவர் தேர்ந்து எடுக்க வேண்டிய பயிற்சிகள் பெரும்பாலும் நின்ற நிலையில் டைனமிக் என்று சொல்லக்கூடிய தொடர்ந்த அசைவுகளை ஏற்படுத்தக்கூடிய பயிற்சுகளாகும் இருக்க வேண்டும். மத்தியம சரீரம் என்று சொல்லக்கூடிய மிகச் சரியான உடல் கட்டுமானம் கொண்டவர், அதே உடல் எடையை மிக நீண்ட நாட்கள் 20, 30 ஆண்டுகளுக்கு ஒருவருக்கு ஒரே உடல் எடை இருக்கிறது என்றால் அவர் மிக ஆரோக்கியமான மனிதர் என்ற அர்த்தம். அவருக்கு மத்தியம தேகம் இருக்கிறது என்ற அர்த்தம். இவர் இவர்க்கான பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நின்ற நிலையில் செய்யக்கூடிய பயிற்சிகள் 15 நிமிடம், உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய பயிற்சிகள் 15 நிமிடம் இருக்க வேண்டும். அப்பொழுதான் ஒரு உடல் எடை என்பது மிகச் சரியான உடல் எடையாக 40 வருடம், 50 வருடம் நீடிக்க முடியும். அப்போ ஒரு உணவு கட்டுப்பாட்டை தேர்ந்தெடுத்தாலம் சரி, உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்தாலம் சரி, யோகப்பயிற்சியை தேர்ந்தெடுத்தாலம் சரி, இந்த மூன்றில் நீங்கள் யார் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு தகுந்த சரியான பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். இன்று நாம் ஒரு புதிய பயிற்சை காணைக்கிறோம். இது ஹாலாஸனம் என்று சொல்லக்கூடிய மரபில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு பயிற்சின் வெவ்வேறு வடிவம் மட்டுமே. ஏனென்றால் பூர்ண ஹாலாஸனம் செய்வதற்கு ஏகப்பட்ட பக்க விளைவுகளும் இருக்கும், அதற்கு தகுந்த பலன்களும் இருக்கும் என்பதால் நேரடியாக அதை செய்யாமல், மரபில் இருக்கக்கூடிய ஒரு பயிற்சியை இன்று இந்த உடல் நிலையில் ஒருவர், ஒரு ஆரம்ப கட்ட பயிற்சியாளராக இருந்தால், அந்த உடல் புள் எதை செய்ய முடியுமோ, அது போன்ற ஒரு பயிற்சியை நாம் முயற்சி செய்கிறோம். இதுவும் ஹாலாஸனம்தான், பூர்வ ஹாலாஸனம் என்று பெயர். இந்த பயிற்சி செய்வதற்கு நீங்கள் சவாசனமென்னும் நிலையில் படுத்து, உங்கள் உடலை மிக நேராக வைத்து கொண்டு, கைகளை இரண்டும் உங்கள் உடலுக்கு மிக அருகிலே உள்ளம் கைகள் கீழ் நோக்கி நிலையில் இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே பாத உத்தானாசனம் என்று சொல்லக்கூடிய வெறும் கால்களை மேல் நோக்கி உயர்த்தும் பயிற்சியை பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட அதற்கு இணையான பயிற்சிதான் இதுவும். மூச்சு உள்ளே வரும் போது இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். உயர்த்திய பின் இறுதி நிலையில், உங்கள் கால்விரல் உங்கள் நெற்றிக்கு நேர் மேல் நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் கண் திறந்து பார்த்தால், உங்கள் கால்விரல் உங்கள் கண்களுக்கு நேர்ல இருக்க வேண்டும். கிட்டத்தட்ட கண் திறந்தவுடனே உங்கள் மேற்கூறை கால்விரல் உங்கள் கண்களுக்கு தெரிய வேண்டும். இதுதான் இறுதி நிலை. இறுதி நிலையில் ஒரே ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின், கால் மட்டும் மெதுவாக கீழ் நோக்கி சென்று தரையில் பதிந்துவிட வேண்டும். இதில் உங்களுடைய இடுப்பு பகுதிக்கு மேல் ஒரு அசைவும் கூட கிடையாது. பொதுவா நம்மோட மத்தானைத் ஆசனங்களிலும்_
- `5:41` When you bring your legs up, usually we make some adjustments in the body. In this Halasana practice, there should be no movement above the hip. You must bring your legs up fully. Do not bend the knees.  
  _கால் மேல் நோக்கி வந்தாலே உடல்ல சில மாற்றங்களை செய்வோம். இந்த ஹாலாஸனப் பயிற்சியில் இடுப்பு பகுதிக்கு மேலே எந்த அசைவுமே கிடையாது. நீங்கள் முழுவதுமாக காலையை மேல் நோக்கி கொண்டு வர வேண்டும். முட்டு பகுதியை மடக்கக் கூடாது._
- `5:50` You should use only as much support as needed, your hands should move only with that pressure, do not push your body upwards, do not lift your neck upwards  
  _உங்களுக்கு தேவையான அத்தனை சப்போர்ட், உருதுணையும், உங்கள் கை, அந்த அழுத்தத்தில்தான் நகர வேண்டுமே தவற, உடலை உந்தி மேல்நோக்கி தள்ளக் கூடாது, கழுத்தை மேல்நோக்கி தூக்கக்_
- `6:01` Do not do that.  
  _கூடாது._
- `6:05` All of that  
  _அது அனைத்துமே_
- `6:09` Will cause some side effects.  
  _ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்._
- `6:13` Because Halasana-type practices, for the lower back, your  
  _ஏனென்றால் ஹாலாஸனம் போன்ற பயிற்சியை மிக லோவர் பாக், உங்கள்_
- `6:18` People with lower back swelling should not do this. Similarly, those with hernia or constipation should not do this. So,  
  _அடி முதுகு பகுதி வீக்கா இருக்கவங்க செய்யக் கூடாது. அதைப்போல ஹெர்னியா விரைவீக்கம் இருக்கக்கூடியவங்க செய்யக் கூடாது. கான்ஸ்டுப்பேஷன் இருக்கவங்க செய்யக் கூடாது. இப்படியென்ன_
- `6:24` There are some criteria.  
  _சில கிரைட்டீரியா இருக்கும்._
- `7:59` So, when you choose this practice, whether you can do it without bending the knees is very important. Doing it with bent knees has no benefit; it becomes just like Pada Uttanasana. How far you can bring your legs back without bending the knees is what you should observe in this practice. Okay, we have seen the side effects.  
  _அதனால இந்தப் பயிற்சி நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது இந்த முட்டு மடக்காமல் இந்தப் பயிற்சியை செய்ய முடியுதா? என்பதுதான் ரொம்ப முக்கியம். முட்டு மடக்கி இந்தப் பயிற்சி செய்யுவதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அது வெறும் பாத உதாசனம் மாதிரியான ஒரு சாதாரண நிலையாக மாறிவிடும். முட்டு பகுதியை மடக்காமல் உங்களால் எவ்வளவு தூரம் காலையை பின் நோக்கி கொண்டு வர முடிகிறது என்பதுதான் இந்தப் பயிற்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். சரி, இது நாம் பக்கவிளைவலைப் பாத்தாச_
