# சப்த ஏக பாத வஜ்ராசனம் ( நிலை - 2 )

**Asana:** Sapta Eka Pada Vajrasana (சப்த ஏக பாத வஜ்ராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 28 May 2022
**Duration:** 5m 48s
**Video:** https://www.youtube.com/watch?v=_8Km1u-ARWQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/sapta-eka-pada-vajrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/251.json

## Summary

The video begins with a discussion of the Mysore yoga tradition and its influence on modern yoga practices, especially in the West. The teacher then demonstrates Sapta Eka Pada Vajrasana (Stage 2), explaining step-by-step how to perform the asana, emphasizing breath awareness and focus on specific body areas for therapeutic benefit. The session concludes with instructions for mindful breathing and relaxation.

**Tags:** yoga tradition, props in yoga, therapeutic practice, breath awareness, Sapta Eka Pada Vajrasana, one-legged Vajrasana, abdomen focus, spinal extension, relaxation

## Chapters

- `0:00` Topic: Mysore Yoga Tradition and Therapeutic Practice
- `2:11` Asana: Sapta Eka Pada Vajrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, all over the world  
  _நண்பர்களே, உலகம் முழுவதும்_
- `0:04` The art of yoga or  
  _யோகக் கலையை அல்லது_
- `0:05` the Indian yoga tradition  
  _இந்திய யோக மரபை_
- `0:07` has been spread and integrated  
  _கொண்டு சென்று சேர்த்த_
- `0:09` by the lineage of important gurus.  
  _முக்கியமான குருமார்களின் மரபை_
- `0:11` We are observing them together.  
  _நாம் ஒன்றாக பார்த்துக்கொண்டு வருகிறோம்._
- `0:12` Among them, only the important traditions  
  _அவற்றில் முக்கியமான மரபுகளை மட்டும்_
- `0:44` are what we are seeing today. From the 1920s till now, traditions that have established a systematic curriculum. Among them, the most important is the Mysore yoga tradition.  
  _தான் நாம் இன்று பார்க்கிறோம். கிட்டத்தட்ட 1920, 20களில் தொடங்கி இன்று வரை இருக்கக்கூடிய தணமான கல்வித்திட்டத்தை மிகச்சரியாக நிறுவகித்து கொண்டிருப்பக்கூடிய மரபுகள் என்று ஒருவேண்டும் சொல்லிக்கொள்ளலாம். அவற்றில் முக்கியமானது மைசூர் யோகா ட்ரெடிஷின் என்று சொல்லக்கூடிய மைசூர் யோக மரபு._
- `0:46` This Mysore yoga tradition was established in the 1920s by Guru Sri Krishnamacharya, supported by Mysore Maharaja Krishnaraja Wodeyar.  
  _இந்த மைசூர் யோக மரபு வந்து 1920களில் கிருஷ்ணராஜ ஒடையார் என்ற மைசூர் மஹாராஜாவர்களால் ஆதரிக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு குருநாதரான குரு ஸ்ட்ரீ கிரிஷ்ணமாச்சாரியா என்பவரால் ஏற்படுத்தப்பட்ட மரபுதான் இந்த மைசூர் யோக மரபு._
- `0:48` Only after their arrival  
  _இவர்கள் வந்த பின்னதான்_
- `0:49` After the Mysore yoga tradition came, a practice  
  _இந்த மைசூர் யோகா ட்ரெடிஷன் வந்த பின்னதான் ஒரு பயிற்சி_
- `0:50` For someone unable to perform  
  _செய்ய முடியாத ஒருவருக்கு_
- `0:52` with the help of a specific prop  
  _ஒரு குறிப்பிட்ட உபகரணத்தின்_
- `0:54` through a prop, one can get the full benefit of the practice. For example, if you cannot do Sirsasana, they will help you do it using a hand or a specially shaped wooden block, so you get the full benefit. This is how their  
  _மூலம் அந்த பயிற்சியை செய்ஞ்சை வைத்து அதன் மூலம் அந்த பயிற்சி கொடுக்கக்கூடிய முழுப் பலனையும் அடையிதல். உதாரணமாக உங்களுக்கு சிரசாசனம் செய்ய முடியாத நிலை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு இனையாகவே இவர்கள் ஒரு கையிறின் மூலமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மரக்கட்டையில் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் மூலமாகவோ உங்களை சிரசாசனம் செய்ய வைத்து விடுவார்கள். அப்போ சிரசாசனம் கொடுக்கக்கூடிய மொத்தப் பலனையும் நீங்கள் அடைந்து விடலாம். இப்படித்தான் அவர்களுடைய_
- `1:25` yoga structure works.  
  _யோக கட்டுமானம் இருக்கிறது._
- `1:29` Especially in Western countries  
  _முக்கியமாக மேலை நாடுகளில்_
- `1:31` Even today, since the 1920s, intense traditional practices like Ashtanga yoga and Vinyasa yoga are based on their curriculum. Today we are going to see the next stage of pointed Vajrasana. This is called pointed one-legged Vajrasana. For this, as usual, Vajrasana  
  _இன்றும் 1920களில் தொடங்கி இன்றும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக மிகப் பிரபலமாக இருக்கக்கூடிய அஷ்டாங்க யோகம், வின்யாச யோகம் போன்ற தீவிரமான மரபார்ந்த பயிற்சிகள் அனைத்துமே இவர்களுடைய பாடத்திட்டம் தான். இன்று நாம் சுட்ட வஜ்ராசனத்தின் இன்னும் ஒரு அடுத்த நிலையை காண ஆகிக்கிறோம். இது சுட்ட ஏகபாத வஜ்ராசனம் என்று பெயர். இதற்கு நீங்கள் எப்பொழுதும் போல் வஜ்ராசனம் எனும்_
- `2:11` Sit in Vajrasana, then slowly move your body backward with the help of your knees, bringing your head to the floor. In the final position, the back of your head  
  _நிலையில் அமர்ந்து மெதுவாக பின்புறமாக உடலை கொண்டு சென்று உங்களுடைய முழங்கையின் உதவையுடன் முழுவதுமாக உங்களுடைய தலையைத் தலையில் கொண்டு சென்று சேர்த்து விட வேண்டும்.இறுதி நிலையில் உங்களுடைய தலையின்_
- `2:14` and shoulder blades should be on the floor. If possible,  
  _பின் பகுதி தோள்பட்டை தரையில் இருக்கட்டும்.முடிந்தால்_
- `2:17` both hands can go backward  
  _கைகள் இரண்டும் பின்புறமாக சென்று_
- `2:19` and touch the floor in a locked position. From here, slowly  
  _தரையை தொட்ட நிலையில் லோக்கோர்த்த நிலையில் இருக்கலாம்.இதிலிருந்து மெதுவாக_
- `2:22` only one leg  
  _ஒரு காலை மட்டும்_
- `2:25` is taken outward  
  _வெளிப்புறமாக எடுத்து_
- `2:27` and stretched forward  
  _முன்னுபுறமாக நீட்டி நிலையில்_
- `2:28` and you should lie down. This is  
  _படுத்துக்கொள்ள வேண்டும்.இதுதான் அனைவருக்கும்_
- `2:30` the final stage of this practice. In this position,  
  _இந்த பயிற்சியுடன் இறுதி நிலை.இந்த நிலையில்_
- `2:45` you should focus on your abdominal area. In the abdomen, your breath  
  _நீங்கள் கவனிக்க வேண்டியது உங்களுடைய வயிற்றுப் பகுதியைத்தான்.வயிற்றுப் பகுதியில் நீங்கள் உங்களுடைய மூச்சை_
- `2:56` should be counted three times. Each time you inhale and exhale, the abdomen rises and falls naturally. Observe this, close your eyes, and inhale and exhale three times. After three breaths,  
  _மூன்று முறை எண்ணிக்கொள்ள வேண்டும்.ஒரு முறை மூச்சு உள்ளே வந்து வெளியே செல்லும்போது வயிற்றுப் பகுதி தானாகவே மேலும் கீழும் ஆக ஏறி இறங்கும். அதை கவனித்துக் கொண்டே கண்கள் மூடி மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட_
- `2:58` then gently relax your hands, stretch your left leg forward, and lie in Savasana.  
  _பின் மெதுவாக கைகளைத் தளர்த்திக்கொண்டு இந்த இடது காலை முன்புறமாக நீட்டி சவாசனம் என்னும் நிலையில் படுத்து_
- `3:08` Do not get ready for the next practice yet.  
  _அடுத்த பயிற்சிக்கு ரெடியாக வேண்டாம்._
- `3:08` Then you can turn to the right or left, get up  
  _அப்பா நீங்கள் வலது புறமாகவோ இடது புறமாகவோ திரும்பி படுத்து எழுந்து_
- `3:10` and sit  
  _அமர்ந்துதான்_
- `3:13` to start the next round.  
  _நீங்கள் அடுத்த சுற்றுக்கு வரவேண்டும்._
- `3:15` Now again sit in Vajrasana  
  _இப்போது மருபடியும் வஜ்ராசனத்தில் அமர்ந்து_
- `3:17` and slowly move your body backward  
  _மெதுவாக உடலை பின்புறமாகக் கொண்டு சென்று_
- `3:20` with the help of your knees  
  _முழங்கையின் உதவியுடன் சிறிது_
- `3:23` gently bring your body towards the floor  
  _சிறிதாக உடலை தரையை நோக்கி கொண்டு சென்று_
- `3:25` placing the back of your head and spine  
  _தலையின் பின்பகுதியையும் முதுகையையும் கொண்டு_
- `3:28` on the floor  
  _வந்து தரையில் பதித்த பின்_
- `3:30` slowly stretch your left leg outward, and in the final position, focus on the abdomen  
  _மெதுவாக இடது காலை வெளிப்புறமாக நீட்டி இறுதி நிலையில் வயிற்றுப்பகுதியைக்_
- `3:33` close your eyes  
  _கண்கள் மூடி_
- `3:37` focus on the abdomen and  
  _வயிற்றுப்பகுதியைக் கவனித்துக்கொண்டு மூன்று_
- `3:39` inhale and exhale three times.  
  _முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்._
- `3:42` In the final position, after three breaths  
  _இறுதி நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து_
- `3:45` after exhaling  
  _வெளியே விட்ட பின்_
- `3:46` gently push the leg outward, relax your hands, stretch your right leg outward, and lie in Savasana. Stay in this position for ten seconds, then prepare yourself for the next round. Regarding this practice,  
  _மெதுவாக காலை வெளிப்புறமாக தள்ளிக் கை தளரப்படும் படுத்தி வைத்து வலது காலை முழுவதுமாக வெளிப்புறமாக கொண்டு சென்று சவாசனம் என்னும் நிலையில் படுத்துக்கொள்ளாம். இந்த நிலையில் ஒரு பத்து நொடிகள் படுத்து விட்டு நீங்கள் அடுத்த பயிற்சிக்கு உங்களை அடுத்த சுற்றுக்கு உங்களை நீங்கள் தயார்செய்துகொள்ளாம். இந்த பயிற்சியைப் பொறுத்தவரை_
- `4:06` you should do this practice with your eyes closed.  
  _நீங்கள் கண்கள் மூடி இந்த பயிற்சியை செய்ய வேண்டும்._
- `4:09` There are three areas to focus on.  
  _கவனிக்க வேண்டிய பகுதி மூன்று இடம்._
- `4:11` One is your forehead  
  _ஒன்று உங்களுடைய புருவமத்தி_
- `4:14` directly behind it is the back of your head.  
  _அதற்கு நேர் பின்புறம் இருக்கக்கூடிய தலையின் பின்பகுதி._
- `4:17` Because that is what presses against the floor  
  _ஏன்னா அது தான் தலையோடு தரையாக_
- `4:20` in a pressed position.  
  _அழுத்திய நிலையில் இருக்கிறது._
- `4:21` Similarly,  
  _அதற்கு இனையாகவே_
- `4:23` your throat pit, your throat  
  _உங்கள் தொண்டைக்குழி உங்கள் தொண்டை_
- `4:24` area  
  _பகுதி_
- `4:25` directly behind it  
  _அதற்கு நேர் பின்புறம் இருக்கக்கூடிய_
- `4:28` is the neck area. This is the second  
  _கழுத்து பகுதி. இது இரண்டாவது_
- `4:30` and third is your abdominal area  
  _மூன்றாவது உங்கள் வயிற்றுப் பகுதி_
- `5:02` Below the navel is the spine. To observe the breath, focus on these three areas for each breath. Inhale and exhale once at the forehead, once at the throat, and once at the abdomen. When you do this, the practice becomes therapeutic. When does a practice become therapy? As we've been saying for the past few days,  
  _தொப்புள் பகுதியைக்குக் நேர் கீழே இருக்கக்கூடிய முதுகுத்தண்டு. நிங்க மூச்சை எப்படி கவனிக்கலாம் என்றால் மூச்சு இந்த மூன்று பகுதிகளையும் ஓவ்வொரு மூச்சாக கவனித்துக்கொள்ளாம். நெற்றிப் பகுதியில் ஒரு முறை மூச்சு உள்ளே வந்து வெளியே செல்கிறது. தொண்டை பகுதியில் ஒரு முறை மூச்சு உள்ளே வந்து வெளியே செல்கிறது. வயிற்றுப் பகுதியில் ஒரு முறை மூச்சு உள்ளே வந்து வெளியே செல்கிறது. என்று கவனித்து செய்யும்போது இந்த பயிற்சி நேரடியாக சிகிச்சையாக மாறி விடும். ஒரு பயிற்சி என்பது எப்போது சிகிச்சையாக மாறுகிறது என்றால் ஏற்கணவே கடந்த சில நாட்களாக நாம் சொல்லிக்கொண்டே வருவது போல்_
- `5:04` In a practice  
  _ஒரு பயிற்சியில்_
- `5:07` when you observe your breath going in and out  
  _மூச்சு உள்ளே வந்து வெளியே செல்பதை உங்களுடைய_
- `5:10` through your attention  
  _கவனத்தின் மூலமாகவும்_
- `5:12` and sharp awareness  
  _உங்களுடைய கூர்ந்த அவதானிப்பின்_
- `5:14` as well  
  _மூலமாகவும்_
- `5:15` you can transform your breath into prana, life energy, and vital force  
  _மூச்சை நீங்கள் ப்ராணனாக, உயிர் ஆற்றலாக, உயிர் சக்தியாக மாற்றிக்கொள்ள_
- `5:20` It is possible.  
  _முடியும்._
- `5:21` All that is needed is awareness.  
  _அதற்கு தேவை அவதானிப்பு மட்டும்தான்._
- `5:23` So in the final position, you  
  _அப்போ இறுதி நிலையில் நீங்கள்_
- `5:24` should pay attention  
  _அவதானிப்பு கவனிக்க வேண்டியது_
- `5:26` to these three areas: forehead, throat pit, and navel area.  
  _இந்த மூன்று இடங்களைப் புருவமத்தி தொண்டைக்குழி தொப்புள் பகுதி._
- `5:30` When you focus on all three, the  
  _இவை மூன்றையும் கவனித்துக்கொண்டு செய்யும்போது இங்கே இருக்கக்கூடிய_
- `5:34` blockages and stagnations  
  _தேக்கங்கள், இருக்கங்கள் அனைத்தும்_
- `5:36` will clear  
  _விலகி_
- `5:36` and a normal practice  
  _சாதார்ன பயிற்சி என்பது_
- `5:38` becomes therapeutic.  
  _சிகிச்சையாக மாறி விடும்._
- `5:40` With another practice  
  _மீண்டும் ஒரு பயிற்சியுடன்_
- `5:42` we will meet tomorrow morning.  
  _நாளை காலை சந்திப்போம்._
- `5:43` Thank you. Greetings.  
  _நன்றி. வணக்கம்._
