# சேது பந்த சர்வாங்காசனம் (நிலை - 4)

**Asana:** Setu Bandha Sarvangasana (சேது பந்த சர்வாங்காசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 8 Jun 2022
**Duration:** 7m 11s
**Video:** https://www.youtube.com/watch?v=nFcN9XwC6sU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/setu-bandha-sarvangasana-262
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/262.json

## Summary

The video begins with a discussion on integrating Ayurveda and yoga, focusing on the concepts of vata, pitta, and kapha, and how balancing these doshas can improve health. The second half demonstrates Setu Bandha Sarvangasana (Bridge Pose), explaining its step-by-step practice, especially as a preparatory stage for Sarvangasana, and highlighting its benefits for digestion and respiratory issues.

**Tags:** dosha balance, ayurveda principles, digestive fire (agni), integration of yoga and alternative medicine, Setu Bandha Sarvangasana, bridge pose, hip lift, digestive stimulation, respiratory benefit

## Chapters

- `0:00` Topic: Ayurveda, Doshas, and Yoga for Digestive Balance
- `2:50` Asana: Setu Bandha Sarvangasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, to master some basics, we must integrate other fields comparable to alternative medicine or yoga. For example, Ayurveda, a long-standing Indian tradition, has a deep heritage on how to approach and maintain life healthily. In all basic yoga practices, if we need to discuss physical components, we must take concepts from Ayurveda. The three fundamental concepts in Ayurveda are vata, pitta, and kapha. Yoga's foundation is the life force called prana. When we combine these two traditions, we can gain double the benefits compared to practicing them separately. For instance, vata refers to the air element in the body; its excess or deficiency leads to diseases and imbalance, as explained in Ayurveda. Vata dosha is mainly located in the lower abdomen and pelvic regions. The second, pitta dosha, is related to the large intestine and abdominal area, and its excess or deficiency causes specific diseases. The third, kapha, is the water element, present in the chest, throat, head, and all joints. Excess or deficiency of kapha leads to many diseases. Bodies dominated by vata, pitta, or kapha need balancing, so we  
  _நண்பர்களே மாற்று மருத்துவத் துறை அல்லது யோகத்துக்கு நிகராக இருக்கக்கூடிய மற்ற துறைகளையும் இணைத்துத்தான் நாம் அடிப்படையான சில விஷயங்களை நாம் கட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஆயுர்வேதம் என்ற மிக நீண்ட இந்திய மரபில இருக்கக்கூடிய ஒரு துறை ஒரு உயிரை எப்படி அணுகுவது, அந்த உயிரை எப்படி ஆரோக்யத்துடன் வைத்துக்கொள்வது போன்ற மிக நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டுள்ளது. பொதுவாக அடிப்படையான யோகப் பயிற்சிகள் அனைத்திலும் ஏதேனும் வகையில் உடலியல் கூறுகள் சார்ந்து பேச வேண்டும் என்றால் நாம் அடிப்படையாக ஆயுர்வேத மரபிலிருந்துதான் விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாக, வாதம், பித்தம், கபம் என்று சொல்லக்கூடிய இந்த மூன்று கருத்துக்கள்தான் ஆயுர்வேதத்தின் அடிப்படை. யோகத்தின் அடிப்படை என்பது பிராணன் என்று சொல்லக்கூடிய உயிராற்றலை மையமாகக் கொண்டது. அப்படி இந்த இரண்டு மரபுகளையும் இணைத்து ஒரு விஷயத்தை செய்யும்போது நாம் சாதாரணமாக செய்யும் அல்லது அடையும் பலனை விட இரண்டு மடங்கு கூடுதலாக பலங்களை அடைந்துவிட முடியும். உதாரணமாக, வாதம் என்று சொல்லக்கூடிய இந்த உடலில் இருக்கக்கூடிய காற்றின் அளவு, காற்றின் தன்மை இருக்கிறதா? அது மிகும் பொழுதும் அல்லது காற்றின் தன்மை குறையும் பொழுதும் ஏற்படக்கூடிய நோய்கள், ஏற்படக்கூடிய சமநிலை இன்மை என்பதைப்பற்றி ஆயுர்வேதம் பேசுகிறது. இந்த வாதம் என்பது வாததோஷம் என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட தோஷம் இந்த உடலில் எங்கே அமைந்திருக்கிறது என்றால் அடிவயிறு மற்றும் குடம் மற்றும் பின் பகுதிகளில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆற்றல், குறிப்பிட்ட சக்தி. இது முதல் நிலை. இரண்டாவது பித்தம் என்று சொல்லக்கூடிய பித்த தோஷம் என்பது நம்முடைய பெருங்குளல் சார்ந்த அல்லது பெருங்குளல் வயிற்றுப்பகுதியில் இருக்கக்கூடிய ஒரு நிலை. இந்த அக்னி, இந்த பித்தம் என்று சொல்லக்கூடிய இந்த சூட்டின் தன்மை அதிகமாகும்பொழுதும் அல்லது குறையும்பொழுதும் அதற்கு தகுந்த மாதிரியான நோய்களை நாம் உருவாக்கிக்கொள்கிறோம் என்றுரது ஆயுர்வேத மரபு. மூன்றாவது கபம் என்று சொல்லக்கூடிய நீரின் தன்மை. அது நெஞ்சுப் பகுதி, தொண்டை பகுதி, தலை பகுதி மற்றும் உடலின் அனைத்து இணைப்பு பகுதிகளிலும் உருவாகி இருக்கக்கூடியது கபம். இந்த கபம் மிகும் பொழுதும் குறையும் பொழுதும் ஏற்படக்கூடியது ஏகப்பட்ட நோய்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் நமக்கிட இருக்கிறது. வாதம் இருக்கக்கூடிய உடம்பு, அது வாதம் என்ற தன்மை அதிகமாக இருக்கக்கூடிய உடல், பித்தம் என்று சொல்லக்கூடிய சூட்டின் தன்மை அதிகமாக இருக்கக்கூடிய உடல், கபம் என்று சொல்லக்கூடிய நீர் தன்மை அதிகமாக இருக்கக்கூடிய உடல், இந்த மூன்றையும் சமன் செய்வதற்கு நாம்_
- `0:04` With the help of alternative sciences like yoga, we can address some issues. For those with indigestion, we can use Ayurvedic remedies. Similarly, yoga traditions have practices to stimulate the digestive fire (agni) in the abdomen, especially for pitta. Out of over 1,500 practices, we can select those that stimulate pitta, and by practicing them, you can completely overcome pitta dosha in just three months. It's not necessary to rely solely on one field; you can also  
  _மாற்று அறிவியல் துறையான யோகத்துறையின் உதவியுடனும் சில விஷயங்களை செய்துவிட முடியும். சிலருக்கு அஜீரண கோளாறு இருக்கிறது என்றால், அஜீரண கோளாறுக்கு தேவையான மருந்து மாற்றினைகளை நாம் ஆயிர்வேதத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அதற்கு இணையாக பித்தம் என்று சொல்லக்கூடிய நம்முடைய வயிற்றுப் பகுதியில் உருவாகக்கூடிய ஒரு அக்னியை தூண்டக்கூடிய பயிற்சிகளும் நம்முடைய யோகமரபில் இருக்கிறது. ஆயிரத்தி ஐநூற்றுக்கும் மேல்பட்ட பயிற்சிகளில், நமக்கென்று தேர்ந்தெடுத்து சில பயிற்சிகளை, அந்த பித்தத்தை தூண்டக்கூடிய பயிற்சிகளை செய்வதன் மூலமும், இந்த பித்ததோஷத்திலிருந்து வெறும் மூன்று மாதத்தில நீங்கள் முழுக்குமான வெளிவந்து விடலாம். ஒரு அறிவுத்துறை என்பது முழுக்க முழுக்க அதையே மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு இணையாக நீங்கள் வேறொரு துறையிலிருந்தும்_
- `0:06` Or by adopting practices or treatments from another tradition, you can achieve complete benefits even faster. That's why we keep discussing Ayurveda, modern medicine, and yoga together. Today, an important practice: this is a supine (lying down) practice. Mostly, for those with issues in the neck, above the head, or above the throat, or those with poor blood or prana flow, certain practices have been designed. For example, our tradition elaborates on Sarvangasana. One who practices Sarvangasana will have youthfulness, energy, and longevity. But without a strong back, one cannot do Sarvangasana, so it is better to try its various stages step by step. This practice, done lying down, is called Setu Bandha Sarvangasana. For this, lie in Shavasana, bend both legs and keep them close to the body, with feet flat on the floor—this is the basic position. Check if both legs are aligned, toes not staggered, etc. This can be done with eyes closed. After positioning the legs, raise both arms overhead and place them near the ears—this is the basic stage. Entering the practice, in Sarvangasana we usually lift the whole body up, but as this is a preparatory or alternative practice, we only lift the hip region upwards. As you inhale, lift the hips fully up; do not lift the head, neck, or shoulder blades. As you exhale, gently lower the hips back to the floor. This is the first stage. Do this five times: inhale and lift hips, exhale and lower. After five times, hold the posture and breathe in and out three times. This set is done three times. So, five lifts and lowers, then three breaths holding the posture, repeated three times. The whole process takes only two to three minutes. In three minutes, what happens is, first, your digestive fire, called jatharagni, in the abdominal area, a specific  
  _அல்லது மரபாரந்த ஒரு விஷியத்திலிருந்தும் பயிற்சிகளையோ அல்லது மருத்துவ முறைகளையோ உட்கொண்டு முழுமையான பலனை இன்னும் சற்று விரைவாகவே அடைந்து விடலாம் என்பதால்தான் நாம் ஆயுர்வேதம், நவீன மருத்துவம், யோகம் என்ற இந்த மூன்று துறையையும் தொடர்ந்து பேசி கொண்டே வருகிறோம். இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி. இது படுத்த நிலையில் செய்யக்கூடிய ஒரு பயிற்சி. பெரும்பாலும் கழுத்துப் பகுதி, தலைக்கு மேல்பட்ட பகுதி அல்லது தொண்டைக்குளுக்கு மேல்பட்ட பகுதியில் இருக்குமிருப்பவர்கள், சரியான ரத்த ஓட்டமோ, பிராண ஓட்டமோ செல்லாமல் இருப்பவர்களுக்காக என்று சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, சர்வாங்காசனம் பற்றிய நம்முடைய மரபு மிக விரிவாக பேசுகிறது. சர்வாங்காசனம் செய்யக்கூடிய ஒருவர், இளமையுடனும், ஆற்றலுடனும், மிக நீண்ட நாட்கள் இருப்பார் என்பது சர்வாங்காசனத்திற்கு கொடுக்கக்கூடிய அடிப்படை விளக்கம். ஆனால், ஒரு திடமான முதுகுப்பகுதி இல்லாமல் ஒருவனால் சர்வாங்காசனம் செய்து விட முடியாது என்பதால், அதன் பல்வேறு நிலைகளை படிப்படியாக ஒருவர் முயற்சி செய்து பார்க்கலாம். இந்தப் பயிற்சி படுத்த நிலையில் செய்யக்கூடிய சேது மந்த சர்வாங்காசனம் என்றுதான் இதற்குப் பெயர். இதற்கு நீங்கள் ஷவாசனத்தில் படுத்து, இரண்டு கால்களையும் மடித்து உடலுக்குக் அருகிலே வைத்து கொள்ளலாம். உங்களுடைய பாதம் முழுவதுமாக தரையில் பதிந்த நிலையில் இருக்க வேண்டும். இது அடிப்படை நிலை. இந்தக் கால் எப்படி வைத்துவிட்டே நீங்கள் என்னப் பண்ணலாம் அப்படினா, கால்கள் இரண்டும் சரியா இருக்கா, கால் விரல் ஒன்று முன்னே பின்னே இருக்கா, இதெல்லாம் நீங்கள் செக் பண்ணிக்கலாம். கண்ணு மூடி செய்யக்கூடியப் பயிற்சி இது. கண்கள் மூடி உங்களுடைய காலை மிகச் சரியான ஒரு இடத்தில் பொருத்திய பின், கைகள் இரண்டையும் மேல் புறமாக தூக்கி, பின் புறமாகக் கொண்டு வந்து, காதுக்கு மிக அருகிலே வைத்து கொள்ளலாம். இதுதான் அடிப்படை நிலை. இன்னும் நாம் பயிற்சிக்குள்ளே எண்ட்ராகல, இதுதான் நிலை. இந்த இடத்தில பொதுவாக சர்வாங்காசனத்தில் என்ன பண்ணுவோம்னா, மொத்த உடலையும் மேல் நோக்கி தூக்குவோம். இது அடிப்படை அல்லது ஒரு மாற்றுப் பயிற்சி என்பதால் நாம் சிறிது, அதாவது இடுப்பு பகுதியை மட்டும்தான் மேல் நோக்கி உயர்த்தப் போகிறோம். மூச்சு உள்ளே வரும்போடுது இடுப்பு பகுதியை முழுவதுமாக மேலே தூக்க வேண்டும். தலை, கழுத்து, தோல்பட்டை பகுதிகளை மேல்நோக்கி உயர்த்தக் கூடாது. மூச்சு வெளியே செல்லும்போடுது மெதுவாக உங்களுடைய இடுப்பு பகுதி மறுபடியும் தரையை வந்து தொட்டுவிட வேண்டும். இது முதல் நிலை. இதை என்ன பண்ணலா, ஒரு ஐந்து முறை மெதுவாக மூச்சு உள்ளே வரும்போது உங்களுடைய இடுப்பு பகுதியை மேல்நோக்கி செல்ல வேண்டும், மூச்சு வெளியே செல்லும்போது கீழ்நோக்கி இறங்க வேண்டும். இப்படியே ஐந்து முறை செய்து விட்டு இந்த போஷ்ணை ஹோல்ட் பண்ணிக்கோங்க. இந்த இடுப்பு நிலையை அப்படியே தக்க வைத்துவிட்டு மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம். இது இந்த செட் ஒரு மூன்று தடவை. அப்ப மேல் நோக்கி உயர்த்தி உடம்பு உடனே கீழ் நோக்கி கொண்டுவருவது ஐந்து முறை. இதுமாதிரி மேல் நோக்கி உயர்த்தியபின் இறுதிநிலையில் மூன்று மூச்சு உள்ளிழுத்து வெளியிடுதல் ஒரு மூன்று முறை. இது totalmente செய்வதற்கு உங்களுக்கு இரண்டு நிமிடம் அதிகபட்சம் மூன்று நிமிஷம்தான் எடுக்கும். மூன்று நிமிஷத்தில் என்ன ஆவிடும் அப்படினா முதல்ல உங்களுடைய டைஜஸ்டிவ் பையர் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த ஜணலாக்னின் சொல்லக்கூடிய வயிற்றுப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட_
- `2:50` Pitta  
  _பித்தம்_
- `2:57` Or the specific heat quality is stimulated, and for those suffering long-term from indigestion or breathing issues, this asana practice has been designed. At first glance, it may look like a simple stretching posture, but it  
  _அல்லது குறிப்பிட்ட சூட்டு தன்மை தூண்டப்பட்டு, நீண்ட நாட்களாக நீங்கள் அஜீரண கோளாறு அல்லது மூச்சுசார்ந்த பிரச்சனை, மூச்சு விடுவதில் இருக்கக்கூடிய பிரச்சனை, இவை இரண்டுக்கும் ஒரு ஆசனப் பயிற்சியையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். பார்ப்பதற்கு இது எதோ கைக்கால் நீட்டி செய்யக்கூடிய ஆசனப் பயிற்சி போல தோன்றுகிறது. அது_
